பொது செய்தி

தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவ மழை தாமதம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாகி உள்ளது.இந்த ஆண்டு ஜூன் 3ல் துவங்கி, நான்கு மாதங்களாக பெய்யும் தென்மேற்கு பருவ மழை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வரும் 20ம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்க வேண்டிய, வடகிழக்கு பருவ மழை மேலும் ஒரு வாரம்

சென்னை:வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாகி உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 3ல் துவங்கி, நான்கு மாதங்களாக பெய்யும் தென்மேற்கு பருவ மழை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வரும் 20ம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்க வேண்டிய, வடகிழக்கு பருவ மழை மேலும் ஒரு வாரம் தாமதமாகியுள்ளது.அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.

இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 15ம் தேதி ஆந்திரா- - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 16ம் தேதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும். ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யும். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பலத்த சூறாவளி காற்று காரணமாக, இன்று தெற்கு வங்க கடலுக்கும்; நாளை தெற்கு வங்க கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும்; 15, 16ல் தென்மேற்கு வங்கக்கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X