சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மாற்றுத் திறனாளியும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம்!

Added : அக் 12, 2021
Share
Advertisement
செவித் திறன், பேச்சுத் திறன் அற்றவராக, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற, கோவை, காளப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்: எங்க சொந்த ஊர் ஈரோடு. எனக்கு செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு இருப்பது தெரிந்ததும், கோவைக்கு அழைத்து வந்தனர், பெற்றோர்.சிறப்பு பள்ளியில், 'ஸ்பீச் தெரபி, லிப் ரீடிங்' கற்று கொடுத்தனர். அங்கு, எட்டாம் வகுப்பு வரை
சொல்கிறார்கள்

செவித் திறன், பேச்சுத் திறன் அற்றவராக, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற, கோவை, காளப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்: எங்க சொந்த ஊர் ஈரோடு. எனக்கு செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு இருப்பது தெரிந்ததும், கோவைக்கு அழைத்து வந்தனர், பெற்றோர்.சிறப்பு பள்ளியில், 'ஸ்பீச் தெரபி, லிப் ரீடிங்' கற்று கொடுத்தனர். அங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு பின் பொதுவாக அனைவரும் படிக்கும் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில், மற்றவர்களோடு பழக கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது. ஆசிரியர்கள் என் மேல் தனி கவனம் செலுத்தி, முதல் வரிசையில் அமர வைத்து பாடம் நடத்தினர். அவர்களின் வழிகாட்டுதலால், 10ம் வகுப்பில் 472 மதிப்பெண்ணும், பிளஸ் 2வில் 1,117 மதிப்பெண்ணும் எடுத்தேன். செவித்திறன் குறைபாடு பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தேன். அதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை பாராட்டி, விருது கொடுத்தார்.பி.எஸ்.ஜி., டெக்னாலஜியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். கல்லுாரியில் படிக்கும் போது, கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக ஏதேனும் வேலையில் சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். எல்லா தகுதிகளும் இருந்தும், செவித்திறன் குறைபாடால், யாரும் வேலை தர முன்வரவில்லை. கல்லுாரி படிப்பை முடித்து, ஒரு பவுண்டரி அலுவலகத்தில் வேலை செய்தேன். ஆனால், இன்ஜினியரிங் துறை எனக்கு பிடிக்கவில்லை. வேலையை விட்டு அரசு வேலைக்கு முயற்சி பண்ணலாம் என இறங்கினேன். ஓராண்டு வங்கி பணித் தேர்வுகளுக்கு தான் முயற்சி செய்தேன். அப்போது தான், யு.பி.எஸ்.சி.,யில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பிரிவு இருப்பதை கேள்விப்பட்டேன். எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி தான் படித்தேன். யு.பி.எஸ்.சி.,யில் தமிழ் வழியில் எழுதினால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்று தோன்றியது. நம்பிக்கையோடு தேர்வுக்குத் தயாராகினேன்.நுாலகம் மற்றும் நண்பர்கள் உதவியுடன், நாௌான்றுக்கு 14 மணி நேரம் படித்தேன். பயிற்சி வகுப்பில் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தனர். தேர்வு முடிவுகள் வரும் இரண்டு நாட்கள் வரை பதற்றமாக இருந்தது. தேர்வு முடிவை பார்த்தவுடன், இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் துாள் துாளாகி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X