உள்நாட்டு விமான சேவையில் கட்டுப்பாடு முழுமையாக நீக்கம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021
Advertisement
புதுடில்லி :'உள்நாட்டு விமான சேவைகள் ௧௮ம் தேதி முதல் எந்த வித கட்டுப்பாடும் இன்றி வழக்கமான நடைமுறையை பின்பற்றலாம்' என, விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் ஜூன் ௧ முதல், ௫௦ சதவீத இருக்கை
உள்நாட்டு விமான சேவையில் கட்டுப்பாடு முழுமையாக நீக்கம்

புதுடில்லி :'உள்நாட்டு விமான சேவைகள் ௧௮ம் தேதி முதல் எந்த வித கட்டுப்பாடும் இன்றி வழக்கமான நடைமுறையை பின்பற்றலாம்' என, விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் ஜூன் ௧ முதல், ௫௦ சதவீத இருக்கை வசதிகளை மட்டுமே விமானங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதன்பின் ஜூலை 6 முதல், ௬௫ சதவீத இருக்கைகளும், அதன்பின் ௭௨ சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.


latest tamil news



பின், ௮௫ சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. 'வரும் 18- முதல் உள்நாட்டு விமான சேவை எந்த வித கட்டுப்பாடும் இன்றி முழுமையாக இயங்கும். 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்தலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X