பொது செய்தி

தமிழ்நாடு

குடிசை மக்கள் மறு குடியமர்வு கொள்கை வெளியீடு: 27 வரை கருத்து தெரிவிக்கலாம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:குடிசைப்பகுதி மக்களை பாதுகாப்பாக மறு குடியமர்வு செய்வதற்கான, புதிய கொள்கையின் வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து 27ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.அறிவிப்புதமிழக நகர்ப் புறங்களில், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் மறு குடியமர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான வரைவு

சென்னை:குடிசைப்பகுதி மக்களை பாதுகாப்பாக மறு குடியமர்வு செய்வதற்கான, புதிய கொள்கையின் வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து 27ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.அறிவிப்புதமிழக நகர்ப் புறங்களில், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் மறு குடியமர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான வரைவு கொள்கையை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர்.

பல்வேறு அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகளின் கருத்துகளை பெற, வரைவு கொள்கை சுற்றுக்கு விடப்பட்டது.அடுத்த கட்டமாக, பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்காக, வாரியத்தின், http://www.tnscb.org/ என்ற இணையதளத்தில்,வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, பொது மக்கள் தங்கள் கருத்துகளை, 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்?

* ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களை மாற்ற வேண்டும் என்றால், அதற்கான திட்டத்தை மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்

* மக்களை மறு குடியமர்வு செய்வதற்கான, நிலையான செயல்முறைகளை உருவாக்குவது, இந்த கொள்கையின் பிரதான பணியாக இருக்கும்

* ஆட்சேபகரமான புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்கள், நில உரிமை ஆவணம் இல்லாதவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்

* ஒவ்வொரு பகுதிக்கும், மறு குடியமர்வு பணிகளுக்காக ஏழு அம்சங்கள் அடங்கிய வரைவு திட்டம் தயாரிக்க வேண்டும்

* மாநில அளவில் வீட்டு வசதித்துறை முதன்மை செயலர் தலைமையில், பல்வேறு துறைகளின், 21 அதிகாரிகள் அடங்கிய மறு குடியமர்வு கமிட்டி ஏற்படுத்தப்படும்

* சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்களில் கலெக்டர் தலைமையிலும், மறு குடியமர்வு கமிட்டிகள் அமைக்கப்படும்

* இந்த கமிட்டிகளின் கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு, மறு குடியமர்வு தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X