பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கன் மாறக் கூடாது: பிரதமர் மோடி

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : ''பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.தலிபான் பயங்கரவாதிகள் கையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, 'ஜி 20' அமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று ( அக்.12) நடந்தது. இதில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் நரேந்திர மோடி
 பயங்கரவாதம்,மையம் ,ஆப்கன், மாறக்கூடாது, பிரதமர், மோடி

புதுடில்லி : ''பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தலிபான் பயங்கரவாதிகள் கையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, 'ஜி 20' அமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று ( அக்.12) நடந்தது. இதில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஆப்கனில் அமைதி நிலவ வேண்டும்; வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான், 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் விருப்பம். ஆப்கன் மக்கள் பட்டினியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கபட்டுள்ளது இந்தியர்களுக்கு பெரும் மனவலியை தந்ததுள்ளது.


latest tamil news




ஆப்கன் மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதேநேரத்தில் பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக் கூடாது. இதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் அமைய வேண்டும் என்பதுதான், இந்தியாவின் விருப்பம். ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா., சபைக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-202106:52:03 IST Report Abuse
அப்புசாமி சீக்கிரமேவ ஆப்கனில் இந்திய தூதரக ப்ராப்தி ரஸ்து.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202105:52:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சர்வாதிகாரி மையமாக இந்தியா மாறிவிட்டது. உலக நாடுகள் கவலை.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-அக்-202104:40:29 IST Report Abuse
Sanny என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக மாற்றியதே இந்த ஆப்கான் தான். இவங்களை போயி நல்லவனாக எதிர்பாக்கிறார் நம்மாளு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X