ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள்| Dinamalar

ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டோரில், நான்கு பேருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜய குமார், முகமது சபி ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக ஜனாதிபதி
 ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டோரில், நான்கு பேருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்தது.

அதன்படி, எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜய குமார், முகமது சபி ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.இந்த நியமனம் குறித்த மத்திய அரசின் அறிவிப்பாணை, வெளியானது. இவர்கள் பதவியேற்ற தினத்தில் இருந்து, இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பர்.

அதன்பின், பணி நிரந்தரம் செய்யப்படுவர்.புதிய நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். புதிய நீதிபதிகள் நியமனத்தை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை, 59 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X