அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் கட்டண உயர்வு தடுக்க கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் அறிக்கை:நாளை அக்., 14 வியாழக்கிழமை ஆயுத பூஜை, 15ம் தேதி விஜயதசமி, அடுத்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், 19ம் தேதி செவ்வாய் கிழமை மிலாது நபி பண்டிகை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.அரசு மற்றும் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். தனியார் பஸ்களில், இரண்டு மடங்கு கட்டணம்

சென்னை:.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் அறிக்கை:நாளை அக்., 14 வியாழக்கிழமை ஆயுத பூஜை, 15ம் தேதி விஜயதசமி, அடுத்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், 19ம் தேதி செவ்வாய் கிழமை மிலாது நபி பண்டிகை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். தனியார் பஸ்களில், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 'ஏசி' பஸ்களில், சென்னை - கோவை இடையே 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே இந்த நிலை என்றால், பண்டிகைக்கு முன்தினம் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யூகித்துப் பார்க்க முடியாது.

அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தனியார் பஸ்களில் கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம் வசூலிக்க வழி செய்ய, காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X