தொற்றால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தொற்றால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம்'

Added : அக் 12, 2021
Share
சென்னை:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களின் விபரங்களை, ஒரு வாரத்திற்குள் சேகரித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்,'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கண்ணகி நகரில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்

சென்னை:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களின் விபரங்களை, ஒரு வாரத்திற்குள் சேகரித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்,'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கண்ணகி நகரில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்து உள்ளது. மாநிலம் முழுதும், இரு குழந்தைகள் உட்பட, 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்; தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனாவால் உயிரிழந்த நான்கு டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில், இதர காரணங்களால் உயிரிழந்தவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க, 400 கோடி ரூபாய் செலவிட நேரிடும். எனவே, கொரோனாவால் உண்மையாக பாதித்து உயிரிழந்தவர்களை கண்டறியும் பணி, ஒரு வாரத்தில் முடிவடையும்; தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்.

இந்த ஆட்சி வெளிப்படைதன்மையுடன், பணியிட மாற்றங்களை வழங்கி வருகிறது. தற்போது வரை, 6,300 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது. தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்வது இயலாது. அவர்களை துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றுகிற தற்காலிக பணியாளர்களுக்கு, 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் கூடுதலாக செலவிடப்படுகிறதுஇவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X