குர்மீத் ராம் ரஹீமுக்கு 18ல் தண்டனை அறிவிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
பஞ்சகுலா:ஆசிரம மேலாளரை கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உட்பட ஐந்து பேருக்கான தண்டனை அறிவிப்பு, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்ததாகக்

பஞ்சகுலா:ஆசிரம மேலாளரை கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உட்பட ஐந்து பேருக்கான தண்டனை அறிவிப்பு, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2002ம் ஆண்டில்சத்ரபதி என்ற பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2002-ல் ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட ஐந்து பேர் குற்றவாளிகள் என, சமீபத்தில் அறிவிக்கப் பட்டனர். இவர்களுக்கான தண்டனை விபரம், நேற்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தண்டனை விபர அறிவிப்பை ஒத்தி வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையேற்று தண்டனை விபரம் அறிவிப்பை, 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X