வழக்கறிஞர்களுக்கு கோர்ட் அறிவுறுத்தல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:'வேலை நிறுத்தப் போராட்டம், புறக்கணிப்பு என்ற காரணங்களைக் கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருப்பது தொழிலுக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டு உள்ளது.ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் செப்., 27ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.

புதுடில்லி:'வேலை நிறுத்தப் போராட்டம், புறக்கணிப்பு என்ற காரணங்களைக் கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருப்பது தொழிலுக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டு உள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் செப்., 27ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:

வேலை நிறுத்தம் அல்லது நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததாகக் கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் பங்கேற்காமல் இருப்பதை ஏற்க முடியாது; இது தொழில் முறைக்கு எதிரானது.வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் மிக முக்கியமான நபர்கள் மட்டுமல்ல, சமூகத்திலும் மதிக்கப்படுபவர்.

நீதிமன்றங்கள் எந்தத் தடையும் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.தங்களுடைய மனுதாரருக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும் கடமையும் அவர்களுக்கு உள்ளது.'வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது' என, இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு பதிலளிக்கும்படி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலர் உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். வரும், 25ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X