பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை, செம்மையாகட்டும்! கூத்தம்பூண்டியில், 1,080 செம்மரக்கன்று

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தின் ஒரு பகுதியாக, தாராபுரம் அருகே, 1,080 செம்மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 11.70 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட கன்றுகள், மரமாக வளர்ந்து நிற்கின்றன.குறுங்காடுகளை உருவாக்கிய குழுவினரால், பல்லுயிர்
 பசுமை, செம்மையாகட்டும்! கூத்தம்பூண்டியில், 1,080 செம்மரக்கன்று

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தின் ஒரு பகுதியாக, தாராபுரம் அருகே, 1,080 செம்மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 11.70 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட கன்றுகள், மரமாக வளர்ந்து நிற்கின்றன.குறுங்காடுகளை உருவாக்கிய குழுவினரால், பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, ஏழாவது திட்டத்தில், பருவமழையை பயன்படுத்தி விவசாய நிலங்களில் மரக்கன்று நடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், தாராபுரம், கூத்தம்பூண்டியில் உள்ள, நீலகிரியான் தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் நிலத்தில், 1,080செம்மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X