சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 கடைகளில் அடுத்தடுத்து தீ விபத்து 15 வாகனங்கள், ரூ. 2.30 லட்சம் நாசம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
குன்றத்துார், -குன்றத்துார் அருகே, நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2.30 லட்சம் ரூபாய் எரிந்து நாசமாயின.மாங்காடை அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்தவர் லிங்கம், 48. குன்றத்துார்- குமணன்சாவடி சாலையில், சிக்கராயபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சற்று நேரத்தில், அருகில் இருந்த

குன்றத்துார், -குன்றத்துார் அருகே, நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2.30 லட்சம் ரூபாய் எரிந்து நாசமாயின.மாங்காடை அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்தவர் லிங்கம், 48. குன்றத்துார்- குமணன்சாவடி சாலையில், சிக்கராயபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சற்று நேரத்தில், அருகில் இருந்த இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றும் ஓட்டல் ஆகிய கடைகளிலும் தீ பரவியது.பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்துார், ஆவடி பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், மூன்று கடைகளும் முழுதும் எரிந்து நாசமாயின. இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் இருந்த 15 இருசக்கர வாகனங்கள் 2.30 லட்சம் ரூபாய் ஆகியவையும் எரிந்து சாம்பலாயின.இந்த விபத்து குறித்து, மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X