சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டரின் உதவியாளரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை, ஊழியர்களை தரக்குறைவாக நடத்தும் கலெக்டரின் நேர்முக உதவியாளரைக் கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பிராட்வேயில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டராக விஜயராணி உள்ளார். இவரது பொது நேர்முக உதவியாளராக டீனா குமாரி பணிபுரிகிறார்.இவர், வருவாய்த் துறை அலுவலர்களிடம் விரோத போக்காக செயல்படுவதாக கூறி, வருவாய்த் துறை
 கலெக்டரின் உதவியாளரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஊழியர்களை தரக்குறைவாக நடத்தும் கலெக்டரின் நேர்முக உதவியாளரைக் கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பிராட்வேயில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டராக விஜயராணி உள்ளார். இவரது பொது நேர்முக உதவியாளராக டீனா குமாரி பணிபுரிகிறார்.இவர், வருவாய்த் துறை அலுவலர்களிடம் விரோத போக்காக செயல்படுவதாக கூறி, வருவாய்த் துறை அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, சங்கத்தினர் கூறியதாவது:கலெக்டரின் நேர்முக உதவியாளர் டீனா குமாரி, பெண்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் தரக்குறைவாக பேசுவதுடன், அச்சுறுத்தியும் வருகிறார்.'சர்வீஸ் புக்' உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்து போடாமல் அலட்சியமாக செயல்படுகிறார். விடுப்பு கேட்டால், ஊழியர்களிடம் ஒருமையில் பேசுகிறார். கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்றால், ஊழியர்களிடம் விரோதப் போக்கு காட்டுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பின், கலெக்டர் விஜயராணி, உதவியாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பின்னர், அலுவலர்கள் கலைந்து சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X