பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த நாள வெடிப்புக்கு சிக்கலான அறுவை சிகிச்சை : அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மறுவாழ்வு

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை, :ரத்த நாளம் வெடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், 43; எலக்ட்ரீஷியன். இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணைய பிரச்னை உண்டாகி, மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்,
 ரத்த நாள வெடிப்புக்கு சிக்கலான அறுவை சிகிச்சை : அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மறுவாழ்வு

சென்னை, :ரத்த நாளம் வெடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், 43; எலக்ட்ரீஷியன். இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணைய பிரச்னை உண்டாகி, மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, இரப்பை குடல், கணையம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எல்.ஆனந்த் தலைமையில் டாக்டர்கள் பாலகுமரன், முருகன், சரவணன் அடங்கிய குழுவினர், ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:அறிவழகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், அவரது கணையத்தில் நீர் கட்டி உண்டாகி, ரத்தநாளம் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். 'காயில் எம்போலைசேஷன்' முறைப்படி, இரண்டு முறை ரத்த கசிவை கட்டுப்படுத்த முயன்றும் சரி செய்ய முடியவில்லை.

எனவே, அவருக்கு, ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, ரத்த நாளங்கள் தையல்கள் வாயிலாக சரி செய்யப்பட்டது. மேலும், கணைய அழற்சி, மஞ்சள் காமாலையும் சரி செய்யப்பட்டு, ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது.இவ்வாறு உள்ள கணைய பிரச்னைகளுக்கு, அறுவை சிகிச்சை செய்வதன் வாயிலாக, 70 சதவீதம் இறப்பு ஏற்படும். ஆனால், டாக்டர்களின் சிறப்பான சிகிச்சையால், அறிவழகன் நலமுடன் உள்ளார். இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகளில், 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இங்கு, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X