சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உருக்கப்பட்ட கோவில் நகைகளால் ரூ.11 கோடி வட்டி: அரசு தகவல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:'கடந்த 1979ம் ஆண்டு முதல் 5 லட்சம் கிராம் கோவில் நகைகள் உருக்கப்பட்டு, வங்கிகளில் தங்க கட்டிகளாக டிபாசிட் செய்யப்பட்டுள்ளன; அதற்கு, 11 கோடி ரூபாய் வட்டி கிடைத்துள்ளது' என சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சென்னையை அடுத்த மதுரவாயலை சேர்ந்த, சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை தொடர்ந்து, கோவில்களில்

சென்னை:'கடந்த 1979ம் ஆண்டு முதல் 5 லட்சம் கிராம் கோவில் நகைகள் உருக்கப்பட்டு, வங்கிகளில் தங்க கட்டிகளாக டிபாசிட் செய்யப்பட்டுள்ளன; அதற்கு, 11 கோடி ரூபாய் வட்டி கிடைத்துள்ளது' என சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த மதுரவாயலை சேர்ந்த, சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை தொடர்ந்து, கோவில்களில் உள்ள விலை மதிப்பு உடைய நகைகளை உருக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை சட்டப்படி, கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். கோவில்களின் அறங்காவலர்கள், நகைகளின் மதிப்பு, எடை விபரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும். கோவில் நகைகளுக்கு, அறங்காவலர்கள் தான் பொறுப்பு.இன்னும் கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை

இந்நிலையில், அவசரகதியில், கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக, சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நகைகள் அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல.கோவில் நகைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தாமல், தணிக்கை மேற்கொள்ளாமல், அவற்றை உருக்குவதற்கு அரசின் உத்தரவு சட்டத்துக்கு எதிரானது. அதை, ரத்து செய்ய வேண்டும். கோவில் நகைகளை உருக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல, சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும், மனுத் தாக்கல் செய்துள்ளார்.மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் தரப்பில், 'கோவில்களுக்கு என்னென்ன நகைகள் தேவை; புராதன நகைகள் எவை என்பதை கண்டறிய வேண்டும்; அதற்கு, முறையான பதிவேடுகள் இருக்க வேண்டும்

60 ஆண்டுகளாக பதிவேடுகள் இல்லை. நகைகளை உருக்கும் போது, அதில் உள்ள கற்கள் அகற்றப்படும். நகைகளை உருக்க அறநிலையத் துறைக்கு அதிகாரமில்லை' என, வாதிடப்பட்டது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் வாதாடியதாவது:கடந்த, 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைககள் உருக்கப்பட்டு வருகின்றன

இதுவரை, 5 லட்சம் கிராம் நகைகள் உருக்கப்பட்டு, கட்டிகளாக மாற்றப்பட்டு, வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன. அதன் வாயிலாக, 11 கோடி ரூபாய் வட்டி கிடைத்துள்ளது. நகைகளை தணிக்கை செய்ய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத நகைகள் தான் உருக்கப்படும். இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, அரசின் உத்தரவை முழுமையாக படித்து பார்க்கும்படி, மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகவும், கூடுதல் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி, விசாரணையை, 21ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X