கனமழைக்கு நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

கனமழைக்கு நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : அக் 12, 2021
Share
பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக செம்பேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு மாவட்ட கிராம விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது. கடலுார், அரியலுார் மாவட்ட கிராமங்களில் மிக கனமழை பெய்ததால் ஆணைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளாற்றில் கலந்தது.
 கனமழைக்கு நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக செம்பேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு மாவட்ட கிராம விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது. கடலுார், அரியலுார் மாவட்ட கிராமங்களில் மிக கனமழை பெய்ததால் ஆணைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளாற்றில் கலந்தது.

இதனால் செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் ஆற்றங்கரையோர பாசன மோட்டார்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் இரு மாவட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X