சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாற்றின் கரையில் தடுப்பு சுவர் எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., நகர், அஎம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், அடையாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, 42 கி.மீ., துாரம் பயணித்து, சென்னை, பட்டினப்பாக்கம் வழியாக கடலில் கலக்கிறது.மொத்தம், 227 ஊராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி என, இந்த பரப்பில்
 அடையாற்றின் கரையில் தடுப்பு சுவர் எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் கோரிக்கை

எம்.ஜி.ஆர்., நகர், அ


எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், அடையாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, 42 கி.மீ., துாரம் பயணித்து, சென்னை, பட்டினப்பாக்கம் வழியாக கடலில் கலக்கிறது.மொத்தம், 227 ஊராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி என, இந்த பரப்பில் பெய்யும் மழைநீர், இந்த ஆற்றில் வடிகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி மறுகால் திறக்கப்பட்டால், இந்த ஆறு வழியாக தான், உபரி நீர் கடலுக்கு செல்லும்.கடந்த, 2015ல், இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, சென்னை மாநகரை மூழ்கடிக்க காரணமாக அமைந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.இதையடுத்து, எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம் பகுதியில், ஆற்றங்கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.தற்போது பருவ மழை துவங்க உள்ளதால், மீண்டும் குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் பகுதிமக்கள் உள்ளனர். இதனால், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், அடையாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X