சுகாதார சீர்கேட்டில் தி.நகர் பஸ் நிலையம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
தி.நகர், தி.நகர் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறைகள், பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகரின் இதயப் பகுதியான, தி.நகரில், வேலைக்காகவும், ஷாப்பிங் செய்வதற்காகவும், தினமும், சராசரியாக குறைந்தது ௨௫ ஆயிரம் பேர், தி.நகர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தி.நகர் காவல் நிலையத்துக்கும், பஸ்

தி.நகர், தி.நகர் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறைகள், பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகரின் இதயப் பகுதியான, தி.நகரில், வேலைக்காகவும், ஷாப்பிங் செய்வதற்காகவும், தினமும், சராசரியாக குறைந்தது ௨௫ ஆயிரம் பேர், தி.நகர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தி.நகர் காவல் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையில் உள்ள சாலையோரத்தில், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பையில் மழை நீர் கலந்து கழிவுநீராக மாறி, பேருந்து நிலையம் அருகே தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்தும் கழிவுநீர் கசிந்து, துர்நாற்றம் வீசுகிறது. தி.நகர் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறைகளும், பராமரிப்பின்றி, சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. தி.நகர், பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யவும், இங்கு பன்னடுக்கு பேருந்து நிலையம் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X