சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகியிடம் பணம் மோசடி தி.மு.க., -- அ.தி.மு.க., பிரமுகர்கள் கைது ரெகுலர் போஸ்டர் செய்தி

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:நிலம் விற்பதாகக் கூறி, தே.மு.தி.க., நிர்வாகியிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த, தி.மு.க., -- அ.தி.மு.க., பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர்உத்தண்டராமன், 55; தே.மு.தி.க., மாவட்ட துணை செயலர்.கடந்த 2017ல், திருவொற்றியூர் காமராஜர் நகரில் உள்ள 85 சென்ட் இடத்தை இவரிடம் விற்க, திருவொற்றியூர் 8வது வட்ட அ.தி.மு.க., செயலர் டோக்கியோ மணி, 78; திருவொற்றியூர்,

சென்னை:நிலம் விற்பதாகக் கூறி, தே.மு.தி.க., நிர்வாகியிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த, தி.மு.க., -- அ.தி.மு.க., பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர்உத்தண்டராமன், 55; தே.மு.தி.க., மாவட்ட துணை செயலர்.கடந்த 2017ல், திருவொற்றியூர் காமராஜர் நகரில் உள்ள 85 சென்ட் இடத்தை இவரிடம் விற்க, திருவொற்றியூர் 8வது வட்ட அ.தி.மு.க., செயலர் டோக்கியோ மணி, 78; திருவொற்றியூர், கிழக்கு பகுதி தி.மு.க., அவைத் தலைவர் முத்தையா, 65, ஆகியோர், 1.50 கோடி ரூபாய்க்கு விலை பேசினர்.

இதற்கு சம்மதித்த உத்தண்டராமன், முன்பணமாக 22 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளார்.பின் ஆவணங்களை சரிபார்த்த போது, அது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என தெரிந்தது.கைதுஇதனால், உத்தண்டராமன் முன்பணத்தை திருப்பிக் கேட்டார். ஆனால் அவர்கள் இருவரும், பணத்தை தராமல் ஏமாற்றியதால், 2017ல் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின் உத்தண்டராமன், கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்ய, நேற்று முன்தினம் நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார் டோக்கியோ மணி, முத்தையா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X