உயிர்பலி வாங்கிய மழை நீர் வடிகாலில் அடுத்தடுத்து விழுந்த இரு பசு மாடுகள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
நொளம்பூர் :தாய் மற்றும் மகளின் உயிரை பலிவாங்கிய, நொளம்பூர் சர்வீஸ் சாலை மழை நீர் வடிகாலில், நேற்று அடுத்தடுத்து இரண்டு மாடுகள் தவறி விழுந்தன. தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலையின், சர்வீஸ் சாலை வழியாக, திறந்த நிலையில் மழைநீர் வடிகால் செல்கிறது. இங்கு, 2020 டிச., 6ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற, அயனம்பாக்கத்தை சேர்ந்த, கரோலின் பிரிசில்லா, 50, அவரது மகள் இவாலின், 20, ஆகியோர்
 உயிர்பலி வாங்கிய மழை நீர் வடிகாலில் அடுத்தடுத்து விழுந்த இரு பசு மாடுகள்

நொளம்பூர் :தாய் மற்றும் மகளின் உயிரை பலிவாங்கிய, நொளம்பூர் சர்வீஸ் சாலை மழை நீர் வடிகாலில், நேற்று அடுத்தடுத்து இரண்டு மாடுகள் தவறி விழுந்தன. தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலையின், சர்வீஸ் சாலை வழியாக, திறந்த நிலையில் மழைநீர் வடிகால் செல்கிறது. இங்கு, 2020 டிச., 6ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற, அயனம்பாக்கத்தை சேர்ந்த, கரோலின் பிரிசில்லா, 50, அவரது மகள் இவாலின், 20, ஆகியோர் தடுமாறி விழுந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் வடிகாலில் மேலும் விபத்துகள் ஏற்படும் முன், தடுப்பு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், தாய், மகள் உயிரிழந்த பகுதியில் மட்டும், மழை நீர் வடிகாலில் மேல் மூடி அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று காலை அதே மழைநீர் வடிகாலில், 10 அடி ஆழம் உள்ள பகுதியில், பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து, பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.சில மணி நேரத்தில், மீண்டும் ஒரு பசு மாடு, அதே மழை நீர் வடிகாலில் தவறி விழுந்தது. அதையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சில நாட்களுக்கு முன், இதே மழை நீர் வடிகாலில் தடுமாறி விழுந்த பாதசாரி அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள சர்வீஸ் சாலை மழை நீர் வடிகாலில், இனிமேல் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்க, தேசிய நெடுஞ்சாலை துறை தகுந்த தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X