மழைக்கு முன் மரக்கிளை வெட்டி அகற்ற கோரிக்கை| Dinamalar

மழைக்கு முன் மரக்கிளை வெட்டி அகற்ற கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
கோடம்பாக்கம் :கோடம்பாக்கம் பகுதியில், சாலையோரம் அடர்ந்து வளர்ந்துள்ள மரக்கிளைகளை, பருவ மழைக்கு முன் வெட்டி குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழையின் போது, மரங்கள் சாய்ந்து விழவும், கிளைகள் உடையவும் வாய்ப்புகள் உள்ளன. சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், பாண்டி
 மழைக்கு முன் மரக்கிளை வெட்டி அகற்ற கோரிக்கை

கோடம்பாக்கம் :கோடம்பாக்கம் பகுதியில், சாலையோரம் அடர்ந்து வளர்ந்துள்ள மரக்கிளைகளை, பருவ மழைக்கு முன் வெட்டி குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழையின் போது, மரங்கள் சாய்ந்து விழவும், கிளைகள் உடையவும் வாய்ப்புகள் உள்ளன. சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், பாண்டி பஜார், தியாகராயர் சாலையில், மரத்தின் கிளை உடைத்து விழுந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மேற்பகுதி சேதமடைந்தது.கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை, ராஜமன்னார் சாலை, தியாகராயர் சாலை, ஜி.என். செட்டி சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அதிகமாக உள்ளன. இதனால், விபத்துக்கள் ஏற்படும் முன், மரக்கிளைகளை வெட்டி குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X