சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போதை' ஓட்டுனரால் தம்பதி படுகாயம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருமங்கலம் :திருமங்கலம் அருகே நடந்த விபத்தில், போதை கார் ஓட்டுனரால் டூ - வீலரில் வந்த தம்பதி படுகாயமடைந்தனர்.முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 28; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி தீபிகா, 26, என்பவருடன், வெளியில் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.திருமங்கலம் மின் வாரியம் அலுவலகம் அருகே வந்தபோது, எதிர்திசையில் விதிமீறி வந்த கார்,

திருமங்கலம் :திருமங்கலம் அருகே நடந்த விபத்தில், போதை கார் ஓட்டுனரால் டூ - வீலரில் வந்த தம்பதி படுகாயமடைந்தனர்.முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 28; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி தீபிகா, 26, என்பவருடன், வெளியில் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.திருமங்கலம் மின் வாரியம் அலுவலகம் அருகே வந்தபோது, எதிர்திசையில் விதிமீறி வந்த கார், அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த குமார் மற்றும் அவரது மனைவி, சாந்தி காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து விசாரித்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுனரை பிடித்து விசாரித்தனர்.இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த தனசெல்வம், 24, என்பதும், போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X