பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை காலம்; கவனம் தேவை! சுகாதாரத்துறையினர் 'அட்வைஸ்'

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:'பண்டிகை காலம், மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இருப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் கவனமுடன் இருக்க வேண்டும்,' என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முக்கிய சந்திப்பு, வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு ஆடை

திருப்பூர்:'பண்டிகை காலம், மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இருப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் கவனமுடன் இருக்க வேண்டும்,' என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முக்கிய சந்திப்பு, வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு ஆடை வாங்க, ஆயுத பூஜைக்கு பூ, பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல், கூட்டத்துக்குள் வந்து செல்கின்றனர். குடும்பத்துடன், குழந்தைகளை அழைத்து கொண்டு வருவோர் துளியும் விழிப்புணர்வு இல்லாமல், அலட்சியமாக உள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா மெல்ல குறைந்து வருகிறது. இதே நிலை தொடர அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். முடிந்தவரை கூட்டமான இடங்களுக்கு செல்லக்கூடாது. மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவருக்கு சளி, இருமல் வர வாய்ப்புள்ளது.வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் கவனமுடன் இருக்க வேண்டும். உடல் நல குறைபாடு இருந்தால், உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.இவ்வாறு, அவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X