100 சைனிக் பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. ராணுவத்தில் அதிகாரிகளாக சேருவதற்கான

நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நடந்தது.

இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. ராணுவத்தில் அதிகாரிகளாக சேருவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் நாடு முழுதும் சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாருடன் இணைந்து, 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை 2025 - 2026 ஆண்டு வரை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் சுத்திகரிப்பு போன்ற வற்றை மேற்கொள்ள 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த இரண்டாம் கட்டத்தில் மத்திய அரசு தன் பங்காக 36 ஆயிரத்து 465 கோடி ரூபாய் செலவிடும்.

பெரு நகரங்களில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், வரும் 2025 - 2026 ஆண்டு வரை, 2.77 லட்சம் கோடி ரூபாய் செலவிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 76 ஆயிரத்து 760 கோடி ரூபாய்.இதைத் தவிர ஊட்டச்சத்து அதிகம் உள்ள உரங்களுக்கு 28 ஆயிரத்து 655 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X