ஆக்கிரமிப்பு வாகனங்களால் ஆற்காடு சாலையில் நெரிசல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வடபழநி:மெட்ரோ ரயில் பணியால் குறுகலான சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் மேலும் சுருங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், கோடம்பாக்கம் -- போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் வடபழநி ஆற்காடு சாலை வரை, ஒரு வழிப்பாதையாக
 ஆக்கிரமிப்பு வாகனங்களால் ஆற்காடு சாலையில் நெரிசல்

வடபழநி:மெட்ரோ ரயில் பணியால் குறுகலான சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் மேலும் சுருங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், கோடம்பாக்கம் -- போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் வடபழநி ஆற்காடு சாலை வரை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இதில், வடபழநி ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இச்சாலை குறுகலாகியுள்ளது. மேலும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால், சாலை மேலும் சுருங்கியுள்ளது.இதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் உள்ள நடைபாதை, பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளால், விபத்து அபாயமும் உள்ளது.எனவே, சாலையோரம் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை போலீசார் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன், நடைபாதையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X