சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்றத்தூர் ஓட்டு எண்ணிக்கை முறையாக செய்யாததால், ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
குன்றத்துா குன்றத்துார் ஒன்றிய ஊராட்சிகளுக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், ஏற்பாடுகளை முறையாக செய்யாததால், ஊழியர்கள் தரையில் அமர்ந்து, புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஓட்டு எண்ணிக்கை, மூன்று மணி நேரம் தாமதமானது.குன்றத்துார் ஒன்றியத்தில் அடங்கிய, 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், மூன்று மாவட்ட கவுன்சிலர்களுக்கான ஓட்டு எண்ணிக்கை,

குன்றத்துா குன்றத்துார் ஒன்றிய ஊராட்சிகளுக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், ஏற்பாடுகளை முறையாக செய்யாததால், ஊழியர்கள் தரையில் அமர்ந்து, புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஓட்டு எண்ணிக்கை, மூன்று மணி நேரம் தாமதமானது.குன்றத்துார் ஒன்றியத்தில் அடங்கிய, 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், மூன்று மாவட்ட கவுன்சிலர்களுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாங்காடு, முத்துக்குமரன் கல்லுாரியில் நேற்று நடந்தது. ஆர்பாட்டம்அம்பத்துார் துணை கமிஷனர் மகேஷ் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணும் மையத்திற்குள் சென்ற ஒவ்வொருவரும், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.காலை 8:00 மணிக்கு, முகவர்கள் முன்னிலையில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் 'சீல்' திறக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, ஓட்டுப்பெட்டிகளை வகைப்பிரித்தல் அறைகளுக்கு, ஊழியர்கள் எடுத்து சென்றனர். அப்போது, வகைப்பிரித்தல் அறைகளில் இருந்த ஊழியர்கள், உணவு, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை கூட, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையாக செய்யவில்லை எனக் கூறி, கோஷம் எழுப்பினர். பின், ஓட்டு எண்ணும் பணியை புறக்கணித்து, ஆர்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, அனைத்து ஊழியர்களும், புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எதை பற்றியும் கண்டுக்கொள்ளாததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், வெளிநடப்பு செய்ய முயன்றனர். போலீசாரும், வருவாய் துறையினரும் அவர்களிடம் பேச்சு நடத்தினர்.பின், ஓட்டு எண்ணும் பணி, மூன்று மணி நேரம் தாமதமாக 11:00 மணிக்கு துவங்கியது. முதல் ஊராட்சியாக, மலையம்பாக்கம், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கொழுமண்ணிவாக்கம், கோவூர் ஊராட்சிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை மந்தமாகவே நடந்தது. கூச்சல், குழப்பம்கொளப்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியை ஹேமா, 45, திடீரென மயங்கினார். போலீசார் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.நீண்ட நேரம் ஆகியும் மதிய உணவு, தண்ணீர் வழங்கப்படாததால், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிருப்தியில், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதிகாரிகள் முறையான திட்டமிடலுடன் செயல்படாததால், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. ஒவ்வொரு அறையிலும், ஆறு மேஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு, கூடுதலாக, ஆறு மேஜைகள் வைக்கப்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரியுடன், அ.தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தபால் ஓட்டுகளை எண்ணும் போது, கட்சி முகவர்கள் துாக்க மயக்கத்தில் காணப்பட்டனர். மாலை 4:18 மணி வரை, முதல் சுற்று முடிவு அறிவிக்கப்படாததால், வெளியே காத்திருந்த, மற்ற ஊராட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X