அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னரிடம் அண்ணாமலை புகார்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திந்து பேசினார். பின், அண்ணமாலை அளித்த பேட்டி:தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., பா.ஜ., தொண்டரை அடித்தது மட்டும் அல்லாமல், பொது மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களை பறித்து சென்றிருக்கிறார். கடலுார்

சென்னை:தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திந்து பேசினார்.

பின், அண்ணமாலை அளித்த பேட்டி:தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., பா.ஜ., தொண்டரை அடித்தது மட்டும் அல்லாமல், பொது மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களை பறித்து சென்றிருக்கிறார்.

கடலுார் தி.மு.க., - எம்.பி., நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், எம்.பி.,யும், அவரின் உதவியாளரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்.தி.மு.க.,வை சேர்ந்த கடலுார், திருநெல்வேலி எம்.பி.,க்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதை கவர்னர் கண்காணிக்க வேண்டும் என்றும், கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நில ஆக்கிரமிப்பு, சுரங்க கொள்ளை என தற்போதே அராஜகம் தலைதுாக்குகிறது. அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்ய எச்சரிக்கை விட வேண்டும் என்று கவர்னரை சந்தித்து முறையிட்டு உள்ளோம்.கோவையில் பா.ஜ.,வை சேர்ந்தவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
13-அக்-202105:10:35 IST Report Abuse
Raman இவன் ஒரு காமடி பீஸ் அடிக்கடி இந்த மாதிரி எதாவது பண்ணிக்கிட்டு இருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X