சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவணம் இன்றி சரக்குகள்: ரூ.25 லட்சம் வரை வரி வசூல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை:டில்லியில் இருந்து போதிய ஆவணங்கள் இன்றி, சென்னை வந்த சரக்குகளுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிக வரி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.டில்லியில் இருந்து சென்னைக்கு, செப்., 29ல், சரக்கு ரயிலில் ஏராளமான சரக்குகள் வந்தன. அவை, 32 லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டங்களுக்கு செல்ல தயாராக இருந்தன. அவை, உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக, வணிக

சென்னை:டில்லியில் இருந்து போதிய ஆவணங்கள் இன்றி, சென்னை வந்த சரக்குகளுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிக வரி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

டில்லியில் இருந்து சென்னைக்கு, செப்., 29ல், சரக்கு ரயிலில் ஏராளமான சரக்குகள் வந்தன. அவை, 32 லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டங்களுக்கு செல்ல தயாராக இருந்தன. அவை, உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக, வணிக வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:டில்லியில் இருந்து போதிய ஆவணங்கள் இன்றி, ரயிலில் சரக்குகள் வருவதாக தகவல் கிடைத்தது. ராயபுரம் ரயில் நிலையம் வெளியே, லாரிகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அது தொடர்பான ஆவணங்களை சோதனை செய்த போது, முரண்பாடுகள் இருந்தன.

இதையடுத்து, சரக்குகளுடன் லாரிகளை பறிமுதல் செய்தோம். ஒரு வாரமாக சரக்குககளை பிரித்து ஆய்வு செய்தோம். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு, போதிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.முதலில், 7 லட்சம் ரூபாய் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது; தொடர்ந்து, 25 லட்சம் ரூபாய் வரை வணிகர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X