தமிழ்நாடு

மீன் கழிவுகளிலிருந்து உரம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
காசிமேடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து, மகளிர் சுய உதவி குழு மீனவ பெண்கள் அசத்தி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி, தேசிய துாய்மை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய உவர் மீன் ஆராய்ச்சி மையத்தால் இந்த ஆண்டு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்த தினம் கொண்டாடப்பட்டது.உதவித்தொகை'கழிவிலிருந்து

காசிமேடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து, மகளிர் சுய உதவி குழு மீனவ பெண்கள் அசத்தி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி, தேசிய துாய்மை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய உவர் மீன் ஆராய்ச்சி மையத்தால் இந்த ஆண்டு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்த தினம் கொண்டாடப்பட்டது.உதவித்தொகை'கழிவிலிருந்து செல்வம்' என்ற தலைப்பில் கொண்டாடப்பட்ட தினத்தில், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை, மத்திய உவர் மீன் ஆராய்ச்சி மையத்தினர், நேற்று துவக்கி வைத்தனர்.இதுகுறித்து, மத்திய உவர் நீர் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மகாலட்சுமி கூறியதாவது:கடந்த 2019ல், மகளிர் சுய உதவி குழு பெண்கள் மூலம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் மீன் கழிவுகளை அரைத்து இறால் பண்ணை, வேளாண் பண்ணைகளுக்கு உரம் தயாரிக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக நடந்தது.மகளிர் சுய உதவிக்குழு தயாரித்த 25 டன் உரம் தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மகளிர் குழுக்களைப் பாராட்டி, என்.எப்.டி., ஐதராபாத் தேசிய விருது வழங்கி, 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது. இதே மகளிர் குழுக்கள், தங்களது மற்றொரு நிறுவனத்தை காசிமேடில் துவக்கி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னேற்றம்அகில இந்திய மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:காசிமேடு மீன் மார்க்கெட் உட்பட சென்னை முழுதும் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மீன் கழிவுகளை வாங்கி வந்து, மகளிர் குழுக்கள் மூலம் உரம் தயாரிக்கிறோம்.அதை இறால் வளர்ப்போர், வேளாண் மற்றும் மாடித்தோட்டம் வைப்போருக்கு உரமாக தருகிறோம். இதன் மூலம், மகளிர் குழுக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜித்தேந்திரன், ஆராய்ச்சியாளர்கள் சாய்ராம், சந்தீப் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X