தமிழ்நாடு

அம்பத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
அம்பத்துார் :மக்கள் பயன்பாட்டிற்காக, தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை அம்பத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், அம்பத்துார் காவல் நிலையம் அருகே உள்ளது. 2001ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அலுவலக கட்டடம், 10 ஆண்டுகளாகவே பயன்பாடின்றி இருக்கிறது.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வேதாச்சலம் மற்றும் அலெக்சாண்டர் இருவரும், அந்த அலுவலகத்தை
 அம்பத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

அம்பத்துார் :மக்கள் பயன்பாட்டிற்காக, தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை அம்பத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், அம்பத்துார் காவல் நிலையம் அருகே உள்ளது. 2001ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அலுவலக கட்டடம், 10 ஆண்டுகளாகவே பயன்பாடின்றி இருக்கிறது.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வேதாச்சலம் மற்றும் அலெக்சாண்டர் இருவரும், அந்த அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க முயற்சிக்கவில்லை.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அவர்களை சந்திக்க, அவர்களது வீடுகளுக்குத் தான் சென்றனர்.அங்கு கட்சியினர் குவிந்திருப்பர். அவர்களைக் கடந்து எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். அதனால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை, எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.தற்போது ஆட்சி மாற்றத்தால், அம்பத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக ஜோசப் சாமுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போல் இல்லாமல், அம்பத்துாரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தங்களை சந்திப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவரும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களைப் போன்றே அந்த பக்கமே செல்வதில்லை.அம்பத்துார் உழவர் சந்தை அருகே உள்ள, தன் அலுவலகத்திலேயே கட்சி மற்றும் தொகுதி பணிகளை கவனிக்கிறார். இங்கும், எப்போதும் தி.மு.க.,வினர் இருப்பதால், பொதுமக்கள் எம்.எல்.ஏ.,வை எளிதில் சந்திக்க முடிவதில்லை என புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கை குறித்து தெரிவிக்கச் சென்றால், அங்குள்ள கட்சியினர் ஏதாவது காரணம் கூறி, எம்.எல்.ஏ.,வை சந்திக்க விடாமல் அனுப்பி வைத்து விடுகின்றனராம். இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, எம்.எல்.ஏ.,வுக்கென உள்ள தனி அலுவலக கட்டடம் திறக்கப்பட்டால், அவரை எளிதில் சந்திக்கவும், தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கவும் முடியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பழைய எம்.எல்.ஏ., அலுவலகம், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அந்த அலுவலகத்தை சுற்றி சார்-பதிவாளர் அலுவலகம், ரேஷன் உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை உள்ளதால், போக்குவரத்து பிரச்னை, இட நெருக்கடி உள்ளது. எனவே, மாநகராட்சியின் அம்பத்துார் மண்டல அலுவலக வளாகத்தில், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கென இடம் கோரி, மாநகராட்சி உயரதிகாரிகளிடம் உரிய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் ஓரிரு வாரங்களில், அங்கு எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்படும். அதையடுத்து, பொது மக்கள் எளிதில் என்னை சந்திக்க முடியும்.ஜோசப் சாமுவேல், எம்.எல்.ஏ., அம்பத்துார்.நுாலகமாக மாறுமா?எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ள பகுதியில், உணவுப்பொருள் வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகம், அம்பத்துார் மற்றும் கொன்னுார் சார் - பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூல அலுவலகம், வட்டார புள்ளியல் ஆய்வாளர் அலுவலகம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பிரிவு அலுவலகங்கள் என, 10 கட்டடங்கள் உள்ளன. அவற்றுக்கு வரும் வாகனங்களும், அந்த அலுவலகங்களுக்கு செல்ல வழியின்றி தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்குள்ள கருவூலத்திற்கு செல்லும் ஓய்வூதியதாரர் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர். அதனால், வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பின்றி சேதமடைந்த பழைய எம்.எல்.ஏ., அலுவலகத்தை, நுாலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X