பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மனைவி இறப்பு கணவருக்கு இழப்பீடு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை விபத்தில் இறந்தவரின் கணவருக்கு, 31.16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நித்யா, 25; ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர். இவர், 2018 நவம்பரில், ஊரப்பாக்கத்திலிருந்து, குரோம்பேட்டைக்கு, பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த டிப்பர்

சென்னை விபத்தில் இறந்தவரின் கணவருக்கு, 31.16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நித்யா, 25; ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர். இவர், 2018 நவம்பரில், ஊரப்பாக்கத்திலிருந்து, குரோம்பேட்டைக்கு, பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதிய விபத்தில், நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மனைவியின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, நித்யாவின் கணவர் சேட்டு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்தை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக, 31.16 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X