இரு மகன்களை கொன்று தந்தை தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு மகன்களை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

Added : அக் 13, 2021
Share
ஆவடி கணவன், மனைவி பிரச்னையால், தன் இரு மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்றார். ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 30. இவருக்கு, மாரியம்மாள் என்பவருடன், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களது மகன்கள் ரித்தீஸ், 6, ராக்கேஷ், 4.கணேசன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், மாரியம்மாள் இவரை பிரிந்து பெரியபாளையம், வடமதுரை பகுதியில் உள்ள

ஆவடி கணவன், மனைவி பிரச்னையால், தன் இரு மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்றார். ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 30. இவருக்கு, மாரியம்மாள் என்பவருடன், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களது மகன்கள் ரித்தீஸ், 6, ராக்கேஷ், 4.கணேசன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், மாரியம்மாள் இவரை பிரிந்து பெரியபாளையம், வடமதுரை பகுதியில் உள்ள தாயார் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் மாரியம்மாள், தன் மகன்களை கணவரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதன்படி போலீசார், நாளை விசாரணைக்கு வருமாறு கணேசனிடம் கூறியுள்ளனர். தன் மகன்களை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என பயந்த கணேசன், நேற்று முன்தினம் இரவு மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பின், நேற்று காலை வெகுநேரமாகியும் கணேசனையும், அவரது மகன்களையும் காணவில்லை என உறவினர்கள் தேடினர்.இதுகுறித்த புகாரின்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்தனர். இதில், ஆவடி அருகே உள்ள வெள்ளானுார் ஏரியில் இரு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்து, போலீசார் அங்கு சென்றனர்.விசாரணையில், அந்த சிறுவர்கள் ரித்தீஸ், ராக்கேஷ் என்பது உறுதியானது. அதே பகுதியில், பீர் பாட்டிலால் கையை அறுத்துக் கொண்டதில் மயக்க நிலையில் கணேசனையும் போலீசார் மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X