பொது செய்தி

தமிழ்நாடு

புழல் உபரிநீர் கால்வாய் பணி 'அம்போ': முதல்வரையும் ஏமாற்றும் நீர்வளத்துறை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை :தலைமை செயலர் ஆய்வின் போது ஒரு நடிப்பு, முதல்வர் ஆய்வின் போது மீண்டும் நடிப்பு என, பெயருக்கு தான் பணி நடக்கிறதே தவிர, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாருவதில், ஒப்பந்த நிறுவனம் படு அலட்சியமாக இருப்பதாகவும், நீர்வளத் துறையினர் இதை கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின்

சென்னை :தலைமை செயலர் ஆய்வின் போது ஒரு நடிப்பு, முதல்வர் ஆய்வின் போது மீண்டும் நடிப்பு என, பெயருக்கு தான் பணி நடக்கிறதே தவிர, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாருவதில், ஒப்பந்த நிறுவனம் படு அலட்சியமாக இருப்பதாகவும், நீர்வளத் துறையினர் இதை கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.30 டி.எம்.சி., ஆகும். பருவ மழைதற்போது ஏரியில் 2.87 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. விரைவில் துவங்கவுள்ள வடகிழக்கு பருவ மழையில், ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்க வாய்ப்புஉள்ளது. ஏரியில் நீர் இருப்பு அபாய கட்டத்தை எட்டும் போது, மதகுகளை திறந்து உபரிநீர் வெளியேற்றப்பட வேண்டும். உபரிநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. மதகில் துவங்கும் கால்வாய், 11 கி.மீ., பயணித்து, சடையங்குப்பம் அருகே வங்ககடலில் கலக்கிறது. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த கால்வாயை துார்வாரும் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை, நீர்வளத்துறை நியமித்துள்ளது.ஆனால், ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆட்கள் நடமாட்டமுள்ள சாலைகள், பாலங்களுக்கு அருகே மட்டும், உபரிநீர் கால்வாய் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தண்டல் கழனி, பாபா நகர், திருநீலகண்டன் நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர் உள்ளிட்ட இடங்களில் முறையாக துார்வாரப்படாமல் இன்னும் அப்படியே உள்ளது. அலட்சியம்உபரிநீர் கால்வாயில், ஆகாயதாமரை மட்டுமின்றி சீமை கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. உபரிநீர் திறக்கப்படும் போது, ஆகாயதாமரை அடித்துச் செல்லப்படும். ஆனால், சீமை கருவேலம் உள்ளிட்டவற்றை அகற்றாததால், நீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.ஒப்பந்த நிறுவனத்தின் நடவடிக்கையை கண்டுக்கொள்ளாமல், நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர்.புழல் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரும் பணியை, மணலி அடுத்த ஆமுல்லைவாயில் அருகே, சமீபத்தில் முதல்வர் ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வுக்கு முன், தலைமை செயலர் இறையன்புவும் இந்த பணியை ஆய்வு செய்தார்.அப்போது, பணிகளை துரிதமாக செய்வது போல நடித்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனம், ஆய்வுக்கு பின் வழக்கம் போல அலட்சியம் காட்ட துவங்கியுள்ளன. மழை தீவிரம் அடைந்தால், கால்வாய் கரையோர மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. துார்வாரும் பணிகளை முடுக்கி விட முதல்வர் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X