தமிழ்நாடு

பசுமையாக மாற போகுது குப்பை கிடங்கு பெருங்குடியின் பிரதான பிரச்னைக்கு தீர்வு 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க இலக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை :'மூன்றாண்டுகளில், பெருங்குடி குப்பை கிடங்கு பசுமையாக மாறும்; நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும்,'' என, அங்கு 'பயோ மைனிங்' பணியை துவக்கி வைத்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இதன் வாயிலாக, பெருங்குடியின் பல ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.சென்னையில் தினமும், 5,100 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதை,
  பசுமையாக மாற போகுது குப்பை கிடங்கு  பெருங்குடியின் பிரதான பிரச்னைக்கு தீர்வு  3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க இலக்கு

சென்னை :'மூன்றாண்டுகளில், பெருங்குடி குப்பை கிடங்கு பசுமையாக மாறும்; நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும்,'' என, அங்கு 'பயோ மைனிங்' பணியை துவக்கி வைத்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இதன் வாயிலாக, பெருங்குடியின் பல ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.சென்னையில் தினமும், 5,100 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதை, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து, பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.மீதமுள்ள குப்பை, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும்.

இங்கு, பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பையை அகற்றி, நிலம் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுக்க, மாநகராட்சி முடிவு செய்தது.இதன்படி, சென்னை, பெருங்குடி கிடங்கில் கொட்டப்படும் குப்பையை, பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இதை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அமைச்சர் நேரு கூறியதாவது: குப்பையை தரம் பிரித்து கையாளுவதும், அவற்றை கொட்ட இடம் கிடைப்பதும் சவாலாக உள்ளது. கொட்டப்பட்ட குப்பையை, பயோ மைனிங் முறையில் அகற்றி, இடங்களை சுத்தம் செய்கிறோம். இதை, கடந்த 10 ஆண்டுகளில் முறையாக கையாளவில்லை. கொடுங்கையூர் கிடங்கிலும், ஆறு மாதத்தில், இதே போன்று பயோ மைனிங் முறை துவங்கப்படும். முழு குப்பையை அகற்றி, நிலம், நீர்நிலைகள் காப்பாற்றப்படும். தமிழகத்தில், 144 நகர்புற உள்ளாட்சி பகுதியில், இரண்டு கோடி டன் குப்பை உள்ளது. இதில், 44 இடங்களில் உள்ள குப்பையை அகற்றி, 164 ஏக்கர் இடத்தை மீட்டுள்ளோம். மீதமுள்ள, 55 லட்சம் டன் குப்பை அகற்றும் பணி நடக்கிறது. மொத்தம், 1,360 ஏக்கர் இடத்தில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட்டு, இடத்தை மீட்க உள்ளோம். இதன் மூலம், குப்பையால் ஏற்படும் தொற்று பாதிப்பும் தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது, பத்து மண்டலங்களில் குப்பை கொட்டும் மையம் துவங்கி சிறப்பாக செயல்பட்டது.தி.மு.க., ஆட்சியின் போது, இரண்டு கிடங்குகளில் உள்ள குப்பையை தரம் பிரித்து, உரம், சிமென்ட் தயாரிப்பு போன்ற மறுசுழற்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெருங்குடி பகுதியை சுற்றி உள்ள மக்கள், குப்பை கிடங்கு இருக்கக் கூடாது என, நீதிமன்றத்தை நாடினர். தற்போது, மாநகராட்சியின் தீவிர முயற்சியால், பயோ மைனிங் முறையில் குப்பையை அகழ்ந்தெடுக்கும் பணி துவங்கி உள்ளது. மூன்று ஆண்டுகளில், பெருங்குடி குப்பை பகுதி, பசுமை நிலமாக மாறும். நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும். இது, சென்னையின் கனவு திட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளை அப்புறப்படுத்த, பல ஆண்டுகளாக கோப்பு அளவிலேயே இருந்த திட்டம், தற்போது பெருங்குடியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொடுங்கையூரில் துவங்க உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.குப்பை கிடங்கில் மணல் தயாரிப்பு!கொடுங்கையூர் குப்பை கிடங்கில், கட்டட கழிவுகளை மறு சுழற்சி செய்ய, 5 கோடி ரூபாய் செலவில், 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 300 டன் கட்டட கழிவுகள், ராட்சத இயந்திரம் மூலம் அரைக்கப்படுகின்றன. அதிலிருந்து, மூன்று வித ஜல்லி, இரண்டு விதமான மணல் மற்றும் எம் - சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில் வீடு கட்டுபவர்கள், கட்டட கழிவுகளை காலி இடங்களில் கொட்டுவதால், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. தற்போது அந்த கட்டட கழிவுகள் சேகரிக்கப்பட்டு மணல், ஜல்லியாக மாற்றப்படுகிறது. இதற்காக சென்னையில், 10 கோடி ரூபாய் செலவில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில், தனியார் நிறுவன உதவியுடன் இரு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, ஜல்லி, மணல் தயாரிப்பு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X