பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை கொண்டாட்டம்; விழாக்கோலம் பூண்ட திருப்பூர்! பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை விழாவையொட்டி, கரும்பு, பழவகைகள், பூ என, பூஜை மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது.திருப்பூர் நகரப்பகுதியில், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, நகரம் களை கட்டிவிடுகிறது.சரஸ்வதி பூஜை வழிபாடு நாளை நடக்க உள்ள நிலையில், பூஜை பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது.திருப்பூர் பூ மார்க்கெட், பழமார்க்கெட், மளிகை கடைகள்
 ஆயுத பூஜை கொண்டாட்டம்; விழாக்கோலம் பூண்ட திருப்பூர்! பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது

திருப்பூர்:சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை விழாவையொட்டி, கரும்பு, பழவகைகள், பூ என, பூஜை மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது.திருப்பூர் நகரப்பகுதியில், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, நகரம் களை கட்டிவிடுகிறது.சரஸ்வதி பூஜை வழிபாடு நாளை நடக்க உள்ள நிலையில், பூஜை பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது.
திருப்பூர் பூ மார்க்கெட், பழமார்க்கெட், மளிகை கடைகள் இயங்கும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள், பூஜை பொருட்கள் வாங்க குவிந்தனர்.செவ்வந்தி பூக்கள்நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு ஒரு டன் செவ்வந்தி விற்பனைக்கு வந்தது. முதல் ரகம் கிலோ, 250 மற்றும் இரண்டாம் ரகம், 160 ரூபாய்க்கும் விற்பனையானது. மல்லிகை, 800, முல்லை, 600, துளசி ஒரு கட்டு - 15, அரளி - 140 ரூபாய்க்கு விற்றது. பூக்களை வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர்.
இன்று கூட்டம் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.பூ வியாபாரி மாரிமுத்து கூறுகையில், 'நாளை (இன்று) இரண்டு டன் செவ்வந்தி கூடுதலாக வரும். கடந்தாண்டு ஆயுதபூஜையின் போது துவக்கம் முதலே விலை அதிகமாக இருந்தது. நடப்பாண்டு மழையால் செடியில் பூ நிற்காது. இருப்பு வைத்திருக்கவும் முடியாது. எனவே, விவசாயிகள் அதிகளவில் கொண்டு வந்து விடுவர்.கடந்தாண்டை விட நடப்பாண்டு கூடுதலாக செவ்வந்தி பூ விற்பனையாகுமென எதிர்பார்த்துள்ளோம்,' என்றார்.பொரி, கடலைசரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை வழிபாட்டில், கடலை, பொரி, சுண்டல் வைத்து வழிபடுவது வழக்கம். அதற்காக, கடலை, பொரி மற்றும் மிட்டாய் வகைகள் விற்பனை களைகட்டியிருந்தது.
பொரி விலை, கிலோ 80 ரூபாய்க்கும், ஏழு கிலோ பை 450 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதேபோல, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்திருந்தது.ஆரணி பூசணிக்காய்தர்மபுரி மாவட்டம், ஆரணி சுற்றுப்பகுதிகளில் இருந்து, வேன்களில் எடுத்து வந்து, பூசணிக்காய் விற்கப்பட்டது. சில்லரை வியாபாரிகள், பூசணிக்காயை வாங்கிச்சென்றனர். பூசணிக்காய், 25 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தொழிற்சாலைகளில், ஆயதபூஜை நடத்தி, திருஷ்டி கழிக்க பூசணிக்காயில் குங்குமம் தடவி உடைப்பது வழக்கம் என்பதால், ஆயதபூஜையை முன்னிட்டு, பூசணி விற்பனையும் வேகமெடுத்திருந்தது.நத்தம் செங்கரும்புதிருப்பூர், கோவை மாவட்டங்களில், சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை விழாக்களின் போது, வாழைக்கன்று மற்றும் செங்கரும்பு வைத்தும், மாவிலை தோரணம் கட்டியும் அலங் கரிப்பது வழக்கம்.
நாளை சரஸ்வதி பூஜை என்பதால், திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து, செங்கரும்பு விற்பனைக்கு வந்திருந்தது. பெரிய கரும்பு ஜோடி 90 ரூபாய் முதல், 100 வரையும், சிறிய கரும்பு, மூன்று 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.வீதிகள் களைகட்டும்வியாபாரிகள் நேற்று பூ, கடலை, பொரி வாங்கினர். இன்று, வீதிகளில் தற்காலிக கடை அமைத்து, செவ்வந்தி, கடலை பொரி, மிட்டாய் வகைகள் விற்பனை களைகட்ட உள்ளனர். இன்று முதல், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழாக்களில், திருப்பூர் நகரம் களைகட்டப்போகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X