தமிழ்நாடு

வைகோ மகனுக்கு பதவி: மா.செ.,க்களுக்கு நெருக்கடி

Updated : அக் 14, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு பதவி வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, மாவட்ட செயலர்களுக்கு, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.சென்னையில் வரும், 20ம் தேதி ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், வைகோ மகன் துரைக்கு, கட்சி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.தன் மகன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று வைகோ கூறுகிறார். ஆனால், மாவட்ட
வைகோ மகனுக்கு பதவி: மா.செ.,க்களுக்கு நெருக்கடி


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு பதவி வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, மாவட்ட செயலர்களுக்கு, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
சென்னையில் வரும், 20ம் தேதி ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், வைகோ மகன் துரைக்கு, கட்சி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தன் மகன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று வைகோ கூறுகிறார். ஆனால், மாவட்ட வாரியாக, துரைக்கு பதவி வழங்க வலியுறுத்தி வைகோவுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
அதன் விபரம்:
திருச்சி மாநகர் மாவட்ட செயலர் வெல்லமண்டி சோமு: துரை பொறுப்பேற்று, இன்னும் சிறப்பாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், கட்சிக்கு ஆயிரமாயிரம் புதிய இளைஞர்கள் வருவர். உங்களுக்கென்று தனிக் கருத்து இருந்தாலும், இம்முறையும் தொண்டர்களின் உணர்வை ஏற்றுக் கொள்ளுங்கள்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் முருகன்: வைகோ போல அனைத்து திறமைகளையும் உடைய துரைக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்து, வெற்றியை அவரிடம்
சமர்ப்பிப்போம்.
வரும் 20ம் தேதி, துரைக்கு புதிய பொறுப்பு வழங்க வேண்டும்.
சேலம் மத்திய மாவட்ட செயலர் ஆனந்தராஜ்: துரையை வாழ்த்தி வரவேற்போம். சுகம் காண அல்ல; சுமை தாங்க. இன்பம் அடைய அல்ல; இன்னல் ஏற்க. மகிழ்ச்சியாய் வாழ அல்ல; மறத்தமிழினம் காக்க. பதவி சுகம் காண அல்ல; பரிதவிக்கும் மக்களுக்கு போராட. கோடிகள் குவிக்க அல்ல; கொண்ட கொள்கைகளை காத்திட.
திருவாரூர் மாவட்ட செயலர் பாலசந்திரன்: துரை அணிய துணிவது மலர் கிரீடம் இல்லை தான். முள் கிரீடம் என, வைகோ வருந்தலாம்.
ஆனால், தலைவரின் சரியான சீடர் துரை என வைகோவின் உள்ளம் மகிழும். நாங்களும் மகிழ்கிறோம்.நான் ம.தி.மு.க.,காரன் என மார்தட்டி மமதையுடன் நின்றேன். இனியும் நிற்பேன் துரையுடன்.
நாகப்பட்டினம் மாவட்ட செயலர் ராமஞ்சேரி ஸ்ரீதரன்: தேர்தல் அரசியலில் பல நேரங்களில், வைகோ தோற்று இருந்தாலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில், முதல் மனிதராக போராடி சாதனை படைத்தவர்.வரும் தேர்தலில் வெற்றியை, வைகோவின் கால்களில் சமர்ப்பிக்கும் வகையில், துரைக்கு உயர்ந்த பொறுப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் சில மாவட்டங்களில், துரைக்கு ஆதரவாக தீர்மானம் போடாமல் இருப்பதால், அம்மாவட்டச் செயலர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-அக்-202118:08:23 IST Report Abuse
sankaseshan திராவிட பாரம்பரியம் வழி காட்டுகிறது
Rate this:
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
13-அக்-202117:42:02 IST Report Abuse
Balakrishnan S மகன்களுக்கு பதவி பெற்றுத் தருவதில் இந்த அரசியல் அப்பன்கள் ஏன் இப்படி துடியாய் துடிக்கிறார்கள்..? ஒருவேளை எல்லோரும் மக்கு மகன்களோ..???
Rate this:
Cancel
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
13-அக்-202112:14:17 IST Report Abuse
KM Prabhu வாரிசு அரசியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X