சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை, பெரியகுளம், பண்ணைப்புரத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்:சிவகங்கை, தேனி மாவட்டம் பெரியகுளம், பண்ணைப்புரத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள்நேற்று சோதனை நடத்திதனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பாவலர் தெருவில் வசிப்பவர் தங்கம். இவரது மனைவி ஜெமீலா. கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் கார்த்திக் 35, பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தங்கம்
 சிவகங்கை,  பெரியகுளம், பண்ணைப்புரத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் என்.ஐ.ஏ., அதிகாரிகள்  சோதனை

உத்தமபாளையம்:சிவகங்கை, தேனி மாவட்டம் பெரியகுளம், பண்ணைப்புரத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள்நேற்று சோதனை நடத்திதனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பாவலர் தெருவில் வசிப்பவர் தங்கம். இவரது மனைவி ஜெமீலா. கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் கார்த்திக் 35, பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் இறந்துவிட்டார். ஜெமீலா மட்டும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தேசிய பாதுகாப்பு முகமை எஸ்.பி., தர்மராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுவினர் கேரளாவிலிருந்து வந்து, தங்கம் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் யாரும் இல்லை. கூலி வேலைக்கு சென்றிருந்த ஜெமீலாவை அழைத்து வந்தனர். அவரிடம் மகன் கார்த்திக் பற்றிய தகவல்களை கேட்டனர்.

வீட்டில் நடந்த சோதனையில் சில பழைய கடிதங்கள், பழைய அலைபேசி, பழைய நோட்டீஸ் ஆகியவற்றை எடுத்தனர்.தடை செய்யப்பட்ட நக்சல் இயக்கங்களுடன் கார்த்திக் தொடர்பில் இருப்பதாக தெரியவந்ததால் தேடுதல் வேட்டை நடந்துள்ளது.

சுட்டு கொல்லப்பட்ட நக்சல் வீட்டில் சோதனை

பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதியில் 2007 ஜூன் 26ல் நக்சல்கள் வேல்முருகன், முத்துச்செல்வம், பழனிவேல், நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன், நவீன்பிராத், பாலகிருஷ்ணன் உட்பட 11 பேர்ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.சம்பவ இடத்தில் வேல்முருகன், பழனிவேல் உட்பட 4 பேரை வடகரை போலீசார் கைது செய்தனர். 2010ல் ஜாமினில் வெளிவந்த வேல்முருகன் தப்பினார்.

2020 நவ.3ல், கேரளா, வயநாடு மாவட்டத்தில் கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியகுளம் அண்ணாநகரில் உள்ள வேல்முருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில் போலீசார் 2 மணி நேரம் சோதனையிட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள், தேனி நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், பெரியகுளம் போலீசார் உடனிருந்தனர்.

சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 2011 செப்.,11 அன்று துப்பாக்கி சூடு, கலவரம் நடந்தது. இக்கலவரத்தால் சிவகங்கையை சேர்ந்தகாளிதாஸ் 42, பாதிக்கப்பட்டார். அப்போதே கேரளாவிற்கு சென்று விட்டார். அங்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு மாவோயிஸ்ட் ஆக மாறினார்.

பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட காளிதாசை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளாக தேடி வந்தனர். சில நாட்களுக்கு முன் கேரளாவில் அவரை கைது செய்தனர்.அவரதுமூத்த சகோதரர் சிங்காரம் 54. இவர் சிவகங்கை அருகே பொன்நகரில் வசிக்கிறார். இவரது வீட்டில் நேற்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

காலை 5:30 மணிக்கு கொச்சி என்.ஐ.ஏ., இன்ஸ்பெக்டர் உமேஷ் தலைமையில் அதிகாரிகள் துவங்கிய சோதனை 9:30 மணி வரை நீடித்தது. சிங்காரம் பயன்படுத்திய அலைபேசி ஐ.எம்.ஏ.இ., எண், ஆதார், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஆவணங்களை எடுத்து சென்றனர். வாணியங்குடி வி.ஏ.ஓ., காமாட்சி கரிகாலன், தலையாரி கார்த்திகேய ராஜா முன்னிலையில் சிங்காரத்திடம் வாக்குமூலம் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X