சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் வீடுகளில் 'ரெய்டு'

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேனி:தேனி வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முரளீதரன் 55, வீடு, மதுரை திருநகரில் உள்ள சொந்தவீடு, சென்னை தோழியின் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.மதுரை திருநகரை சேர்ந்தவர் முரளீதரன். தற்போது தேனி என்.ஆர்.டி., நகர் பாரதியார் முதல் தெருவில் வாடகைக்கு வீட்டில் தங்கியுள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக

தேனி:தேனி வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முரளீதரன் 55, வீடு, மதுரை திருநகரில் உள்ள சொந்தவீடு, சென்னை தோழியின் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.

மதுரை திருநகரை சேர்ந்தவர் முரளீதரன். தற்போது தேனி என்.ஆர்.டி., நகர் பாரதியார் முதல் தெருவில் வாடகைக்கு வீட்டில் தங்கியுள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து மதுரை டி.எஸ்.பி., கருப்பையா, தேனி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தேனியில் உள்ள வீடு, காரை சோதனை யிட்டனர். சோதனை மதியம் 2:30 மணி வரை நீடித்தது. சோதனையில் பணம், ஆவணங்கள் கைப்பற்றவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X