இருள் சூழ்ந்த வளம் பாலம் ரோடு: தடுமாறும் வாகன ஓட்டிகள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அணைக்காடு - வளம்பாலம் இடையே உள்ள மின்மயான சாலையில் ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரிவதில்லை; இருள்சூழ்ந்து காணப்படுகிறது.தார் சாலை இல்லாமல் மண் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மழைநீர் வடிகால் அமைக்க, தோண்டப்பட்ட இருபது அடி குழி சாலையின் இடதுபுறத்தில் உள்ளது.மூன்று மாதமாக பணி நடக்கவில்லை. கண்ணை கூசும்

திருப்பூர்:திருப்பூர் அணைக்காடு - வளம்பாலம் இடையே உள்ள மின்மயான சாலையில் ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரிவதில்லை; இருள்சூழ்ந்து காணப்படுகிறது.தார் சாலை இல்லாமல் மண் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மழைநீர் வடிகால் அமைக்க, தோண்டப்பட்ட இருபது அடி குழி சாலையின் இடதுபுறத்தில் உள்ளது.மூன்று மாதமாக பணி நடக்கவில்லை.
கண்ணை கூசும் வகையில், 'ஹெட்லைட்' வெளிச்சத்துடன் கனரக வாகனம் வரும் போது, எதிரே வருபவருக்கு ஒன்றும் தெரிவதில்லை. குழியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதை விட, நடந்து செல்லும் பாதசாரிகள் நிலை படுமோசம். இருளில் வாகனங்கள் வரும் போது ஒதுங்கி நிற்க வழியில்லாமல் தடுமாறுகின்றனர். விபத்து நேரிடும் முன், இந்த ரோட்டில், எரியாமல் உள்ள விளக்குகளை மாற்றி புதுவிளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
நெரிசல் குறையும்...
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டை நகருடன் இணைக்கும் சாலைகளில் அணைக்காடு - வளம்பாலம் சாலையும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாமல் உள்ளது. தார் சாலை அமைத்தால் ஈரோடு, ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் வழியாக செல்லும் வாகனங்கள் இந்த வழித்தடத்தில் செல்லும். அதனால், ஊத்துக்குளி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X