பொது செய்தி

தமிழ்நாடு

மனசாட்சிக்கு கட்டுப்படுவதே, பெரிய சட்ட மதிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி பேச்சு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:'மனிதன் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதே மிகப் பெரிய சட்ட மதிப்பு,' என, விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேசினார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருப்பூர் ரேவதி மருத்துவமனை வளாகத்தில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு
 மனசாட்சிக்கு கட்டுப்படுவதே, பெரிய சட்ட மதிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி பேச்சு

திருப்பூர்:'மனிதன் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதே மிகப் பெரிய சட்ட மதிப்பு,' என, விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேசினார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருப்பூர் ரேவதி மருத்துவமனை வளாகத்தில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முதன்மை குற்றவியல் நடுவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
மருந்து கடை உரிமையாளர் சங்க செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். மருந்துகள் ஆய்வாளர் மகாலட்சுமி, ராமசாமி, பேனல் வக்கீல்கள் சாய்பரத், சங்க தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் மருந்து கடைகள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகள் குறித்து விளக்கினர்.நீதிபதி புகழேந்தி பேசியதாவது:நாம் அனைவரும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும். மனித மனசாட்சி என்பது சட்டம், நீதியின் மறு வடிவம். மனசாட்சிக்கு கட்டுப்படுவது என்பதே மிகப் பெரிய சட்ட மதிப்பாகும்.
மருந்து வணிகர்கள் மருந்துகளை ஒழுங்குபடுத்தி வைப்பது, முறையான ஆவணங்கள் பராமரிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். சிறிய சட்ட ஒழுங்குகளை பின்பற்றாமல் இருப்பதும் சட்ட மீறல் தான்.மருத்துவர்களுக்கு அடுத்து பாமரர் முதல் மெத்த படித்தோர் வரை பலரும் மருந்து வணிகர்களை தான் நம்புகின்றனர். அரசு இயற்றிய சட்டங்களை பின்பற்றி நடப்பது, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.மருந்து வணிகர்கள் மருந்துகளை ஒழுங்குபடுத்தி வைப்பது, முறையான ஆவணங்கள் பராமரிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X