ஏ.டி.எம்., மையங்களில் நூதன முறையில் கைவரிசை: வடமாநில வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., மையங்களில் நூதன முறையில் கைவரிசை: வடமாநில வாலிபர் கைது

Added : அக் 13, 2021
Share
திருப்பூர்:தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நுாதன முறையில் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் போலீஸ் சப்-டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம், மூலனுார், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல்
 ஏ.டி.எம்., மையங்களில்  நூதன முறையில் கைவரிசை: வடமாநில வாலிபர் கைது

திருப்பூர்:தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நுாதன முறையில் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் போலீஸ் சப்-டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம், மூலனுார், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல் ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், ஏமாற்றியும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதுபோன்ற தொடர் திருட்டு தொடர்பாக, தாராபுரம் போலீசார் ஏ.டி.எம்., மையங்களில் கிடைத்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வந்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான், 34 என்பது தெரிய வந்தது.இந்நபர், முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு, கார்டுகளை மாற்றி கொடுத்து சென்று, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X