சிறப்பு பஸ் இயக்கம்; இன்று முதல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பஸ் இயக்கம்; இன்று முதல் துவக்கம்

Added : அக் 13, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில் ஆயுத பூஜை சிறப்பு பஸ் இயக்கம் இன்று மாலை துவங்குகிறது. கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ் இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துகழகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 60 சிறப்பு பஸ் தேனி, திருச்சி, மதுரை,

திருப்பூர்:திருப்பூரில் ஆயுத பூஜை சிறப்பு பஸ் இயக்கம் இன்று மாலை துவங்குகிறது. கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ் இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துகழகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 60 சிறப்பு பஸ் தேனி, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, காரைக்குடி, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, இன்று மாலை முதல் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி, யுனிவர்சல் தியேட்டர் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்குகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X