நுால் ஏஜென்ட் கடத்தல்; மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுால் ஏஜென்ட் கடத்தல்; மூன்று பேர் கைது

Added : அக் 13, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில், நுால் விற்பனை முகவர் கடத்தல் விவகாரத்தில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.திருப்பூர், போயம்பாளையம் - அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 64; நுால் விற்பனை முகவர். கடந்த, 9ம் தேதி செல்வராஜை, காரில் வந்த கும்பல் கடத்தி சென்றது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், செல்வராஜ் பல்வேறு தரப்பிடம்

திருப்பூர்:திருப்பூரில், நுால் விற்பனை முகவர் கடத்தல் விவகாரத்தில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.திருப்பூர், போயம்பாளையம் - அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 64; நுால் விற்பனை முகவர். கடந்த, 9ம் தேதி செல்வராஜை, காரில் வந்த கும்பல் கடத்தி சென்றது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், செல்வராஜ் பல்வேறு தரப்பிடம் இருந்து நுால் வாங்கி வேறு நபர்களுக்கு மாற்றி விடுவது வழக்கம். இவ்விவகாரத்தில், பணம் கொடுக்க ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக அவரிடம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபர்கள் கடத்தி சென்றது தெரிந்தது.போலீசாரின் தீவிர விசாரணையில், கடத்தல் விவகாரம் தொடர்பாக, திருப்பூர் காமராஜர் வீதியை சேர்ந்த குமார், 42, உடுமலை, தளியை சேர்ந்த செந்தில்பிரபு, 44 மற்றும் திருப்பூர் ராம்நகரை சேர்ந்த ராஜேந்திரன், 47 ஆகியோரை கைது செய்து, செல்வராஜை போலீசார் மீட்டனர்.பணத்துக்காக கடத்தல்இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன், நுால் வர்த்தகர் குமார் என்பவரிடம் இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நுால் மூட்டையை செல்வராஜ் வாங்கி, வெளி நபருக்கு மாற்றி விட்டார். இதுதொடர்பாக, பணம் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார்.இதனால், அவரை கடத்தி சென்று, பணத்தை வாங்க முடிவு செய்த குமார், தனக்கு உதவியாக, ஐந்து பேரை இதில் ஈடுபடுத்தினார். கடந்த, 9ம் தேதி செல்வராஜை காரில் கடத்தி, கோவைக்கு அழைத்து சென்றனர்.அதன்பின், திருப்பூர் திரும்பும் வழியில், அவர்கள் வந்த காரை மடக்கி, செல்வராஜை மீட்டு, மூன்று பேரை கைது செய்தோம்.இதில், தொடர்புடைய நவீன், பிரபு உட்பட, மூவரை தேடி வருகிறோம். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட, ராஜேந்திரன் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. குண்டாசில் சிறைக்கு சென்று வந்தவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X