மழையால் பன்னீர் திராட்சைக்கு பாதிப்பு: கண்ணீரில் விவசாயிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் 'பன்னீர் திராட்சை'க்கு பாதிப்பு: கண்ணீரில் விவசாயிகள்

Added : அக் 13, 2021
Share
திண்டுக்கல்:மழையால் திண்டுக்கல்லில் பன்னீர் திராட்சை சாகுபடி பாதித்து, விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் கொடிகளில் மழைநீர் படிந்து பழங்கள் வெடித்தும், பிஞ்சு,
 மழையால் 'பன்னீர் திராட்சை'க்கு பாதிப்பு: கண்ணீரில் விவசாயிகள்

திண்டுக்கல்:மழையால் திண்டுக்கல்லில் பன்னீர் திராட்சை சாகுபடி பாதித்து, விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் கொடிகளில் மழைநீர் படிந்து பழங்கள் வெடித்தும், பிஞ்சு, பூக்கள் அழுகியும் வருகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.80 க்கு விற்ற திராட்சை, மழை பாதிப்பிற்கு பின் கிலோவுக்கு ரூ.50 சரிந்து,நேற்று கிலோ ரூ.30 க்கு விற்றது. இந்த விலைக்கும் வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை.

இதனால் டன் கணக்கில் திராட்சை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.விவசாயி சின்னக்காளை கூறியதாவது: ஒன்றரை ஏக்கரில் திராட்சை பயிரிட்டுள்ளேன். தற்போது சீசன் காலம். அறுவடைக்கு முன் மழை வந்ததால் பழங்கள் வெடித்தும், அழுகியும் வீணாகி வருகின்றன. இதில் தப்பிய பழங்களை பறித்து கிலோ ரூ.30 க்கு விற்கிறோம். அழுகிவிடுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் வாங்க முன்வருவதில்லை. இதனால் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X