பொது செய்தி

தமிழ்நாடு

டி.இ.ஓ., டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் பாரபட்சம்: கல்வி அதிகாரிகள் அதிருப்தி

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை:சென்னையில் நேற்று நடந்த மாவட்ட கல்வி அலுவலர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாரின் பாரபட்ச உத்தரவால் பாதித்துள்ளதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.தமிழகத்தில் உள்ள 156 மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நேற்று சென்னையில் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் முன்னிலையில் நடந்தது. முதல்முறையாக மாவட்ட கல்வி

சிவகங்கை:சென்னையில் நேற்று நடந்த மாவட்ட கல்வி அலுவலர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாரின் பாரபட்ச உத்தரவால் பாதித்துள்ளதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 156 மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நேற்று சென்னையில் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் முன்னிலையில் நடந்தது. முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு காலிபணியிடங்களை 'ஜீரோவாக' காண்பித்து நடத்தினர்.

அவர்களுக்கு வழங்கிய கமிஷனரின் செயல்முறை கடிதத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது சொந்த வருவாய் மாவட்டத்திற்குள் டிரான்ஸ்பர் கேட்க கூடாது என தெரிவித்து உள்ளார். கமிஷனரின் இந்த உத்தரவு மாவட்ட கல்வி அலுவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் டிரான்ஸ்பரில் இவ்வளவு உத்தரவுகளை பிறப்பிக்கும் கமிஷனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனத்தில் கோட்டைவிட்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.

வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட நபரை முதன்மை கல்வி அலுவலராக நியமித்தது தான் அதிருப்திக்கு காரணம். 2021 ஆக., ல் முதன்மை கல்வி அலுவலர் டிரான்ஸ்பர் நடந்தது. தஞ்சாவூர் நுாலக அதிகாரியாக இருந்த மணிவண்ணனை அவரது வருவாய் மாவட்டமான சிவகங்கை முதன்மை கல்வி அலுவலராக நியமித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் போன்று பல மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தினரை சி.இ.ஓ.,க்களாக நியமித்துள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் நியமனத்திலும் விதிமுறையை கமிஷனர் நந்தகுமார் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X