சில வரி செய்திகள்... அகற்றினால் சிறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... அகற்றினால் சிறப்பு

Added : அக் 13, 2021
Share
நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணை மூலம் ஆற்றின் கரையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. முன்னர் திருப்பூர் சாயக்கழிவு அதிக அளவு கலந்ததால் பாசனத்திற்கு நொய்யல் ஆற்று நீரை பயன்படுத்த விவசாயிகள் அச்சப்பட்டு வந்தனர். தற்போது தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விடுவதால் பாசனத்துக்கு நீர் பயன்படுகிறது. நொய்யல் ஆற்றில்

நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணை மூலம் ஆற்றின் கரையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. முன்னர் திருப்பூர் சாயக்கழிவு அதிக அளவு கலந்ததால் பாசனத்திற்கு நொய்யல் ஆற்று நீரை பயன்படுத்த விவசாயிகள் அச்சப்பட்டு வந்தனர். தற்போது தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விடுவதால் பாசனத்துக்கு நீர் பயன்படுகிறது. நொய்யல் ஆற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் மரங்களான சீமைக்கருவேல் மரங்களை அகற்ற வேண்டும்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
அவிநாசியில், பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில், அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன் முன்னிலையில், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண். 537/4ல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான இடத்தை நில அளவீடு செய்து, துறைக்கு ஒப்படைப்பதில் தொடர்ந்து, வருவாய் துறையினர் காலதாமதம் செய்வது கண்டனத்துக்கு உரியது. நிலத்தை, வரும், 25ம் தேதிக்குள் ஒப்படைக்காத பட்சத்தில், உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
முதியோருக்கு அடைக்கலம்
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி, சண்முகராஜ். செல்வராஜ், கோமதி ஆகியோர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் முதியவர்களை, போத்தம்பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைத்ததனர்.
அறக்கட்டளையினர் கூறுகையில், 'சங்கரபாண்டியன், விமலா தேவி என இருவரை, டிஸ்ேஸா ஆனந்த் என்பவர் மூலம், காப்பகத்தில் தங்க வைத்துள்ளோம். ஆதரவற்று, நிர்கதியாய் இருந்த நிலையில், அவர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க, இல்லத்தில் சேர்த்துள்ளோம்,' என்றனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உ.பி.,யில், விவசாயிகள் பேரணியில் நடந்த சம்பவத்தை கண்டித்து, பல்லடத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில், விவசாயிகள் பேரணியின்போது விவசாயிகள் பலியான சம்பவத்தை கண்டித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வட்டார தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தனர்.
கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகம் முன், காங்., உட்பட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் இசாக், தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூ., ஒன்றிய துணை செயலாளர் கோபால், காங்., வட்டார தலைவர் மணி, நகர தலைவர் கோபாலகிருஷ்ணன், மாணிக்கம், மகாலிங்கம், ம.தி.மு.க., உட்பட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மாணவிக்கு பாராட்டு
சேலம், சக்தி கைலாஸ் மகளிர் கல்லுாரியில் மாநில சிலம்பாட்ட போட்டி நடந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த நந்திதா வெற்றி பெற்றார். திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ரங்கசாமி, மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, 10 ஆயிரம் ரூபாய் நினைவு பரிசு வழங்கி, பாராட்டினர். அடுத்தடுத்த மாநில போட்டி, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றால், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.
ரேஷனில் பனை வெல்லம்
களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கூறுகையில், ''ரேஷன் கடையில், பனை வெல்லம் வழங்கும் அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதேபோல், பாமோலினுக்கு பதில், நல்லெண்ணெய், கடலை, தேங்காய் எண்ணெய் வழங்கி, அதற்கு அரசு மானியம் வழங்கினால், கிராம பொருளாதாரம் மேம்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க, பசும்பாலுக்கு, லிட்டருக்கு, 40 ரூபாய், எருமை பாலுக்கு, 50 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,'' என்றார்.
தக்காளி விலை 'கிடுகிடு'
கடந்த வாரம், 15 ரூபாயாக இருந்த தக்காளி கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்து, 25 ரூபாய்க்கு விற்றது. சில்லறை விலையில் தக்காளி, 30 ரூபாய். சின்ன வெங்காயம், 20. பெரிய வெங்காயம், 25. மொத்த விலையில் ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு இரண்டாம் தர வெங்காயம் விற்கப்படுகிறது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில்,'ஒரு மாதத்துக்கு பின் தக்காளி விலை உயர்வு கண்டுள்ளது. கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கு நிம்மதியளிக்கிறது,' என்றனர்.
உலக அஞ்சல் தினம்
திருப்பூர், 'நிப்ட்-டீ' கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பில், உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. மாணவி பிரகல்யா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் கலையரசி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர், இந்திய தபால்துறையின் வரலாற்றையும், செயல்பாடுகளையும் விளக்கி பேசினர்.
சட்ட விழிப்புணர்வு
அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், கிளைச்சிறையில் உள்ள சிறைவாசிகள் மத்தியில், இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி தலைமை வகித்தார். கிளைச்சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
வக்கீல்கள் சங்க துணை தலைவர் சாமிநாதன் பங்கேற்று, சிறைவாசிகளிடம் பேசுகையில், ''வட்ட சட்டப்பணிகள் குழுவின் உதவியுடன், சிறையில் இருந்தபடியே கூட, தங்கள் குடும்பத்தின் நலன் சார்ந்த உரிமைகளை பெற முடியும்,'' என்றார்.வார்டு உறுப்பினர் தேர்வுஅவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல், கடந்த, 9ம் தேதி நடந்தது.
பதிவான ஓட்டுகள், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று எண்ணப்பட்டன. அதில், சுயே. வேட்பாளர் தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். அவருக்கு, பழங்கரை ஊராட்சி தலைவர் கோமதி, ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர் சண்முகம் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
செயற்குழு கூட்டம்
ஹிந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில், செயற்குழு கூட்டம் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நாளை (14ம் தேதி), ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சக்தி பூஜை கொண்டாடுவது, இந்து ஆட்டோ முன்னணி சார்பில், அனைத்து ஸ்டாண்டுகளில் ஆயுதபூஜை கொண்டாடுவது மற்றும் அவிநாசியில் நடக்கும் பொதுக்குழுவில் அனைத்து பொறுப்பாளளர்களும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், செந்தில்குமார், சந்துரு, பிரபாகரன், கண்ணன், ராஜராஜன் உட்பட அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
ஏர்ஹாரன் பறிமுதல்
திருப்பூரில், வட்டார போக்குவரத்து துறையினர் திடீர் ஆய்வு செய்து, ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ், ஆய்வாளர்கள் வேலுமணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர். 25 பஸ்களை பரிசோதனை செய்ததில், ஒரு அரசு பஸ் உட்பட ஒன்பது தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி வெளியிடக்கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நல வாரிய முகாம்
சவர தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நலவாரிய முகாம் பல்லடத்தில் நடந்தது. சவர தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஜீவமதி, மாநகர பொருளாளர் செல்வராஜ், மாநில பிரதிநிதி மருது முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். நல வாரியத்தில், 50 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர். பல்லடம் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராமமூர்த்தி, விஸ்வநாதன், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X