பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் வேண்டும்: தொழிற்சங்கத்தினர் போராட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:விசைத்தறி தொழிலாளருக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டுமென, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு, எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கணக்கிட்டு, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த காலங்களை காட்டிலும்,

திருப்பூர்:விசைத்தறி தொழிலாளருக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டுமென, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு, எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கணக்கிட்டு, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த காலங்களை காட்டிலும், விசைத்தறிகள் எண்ணிக்கையும், பணி நேரமும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், உரிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை என, விசைத்தறி தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, இது விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வழி செய்ய வேண்டுமென தொழிற்சங்க கூட்டமைப்பினர், மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வேலுசாமி, எல்.பி.எப்., செயலாளர் சிவசாமி, ஏ.டி.பி., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி., செயலாளர் நடராஜ் உட்பட பலர் பேசினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X