பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கட்டுரை போட்டி ஹார்ட்புல்னெஸ் அமைப்பு அழைப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:சர்வதேச அளவிலான அமைப்புகள் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீராம்சந்த்ரா மிஷன், இந்தியா - பூடான் ஐக்கிய நாடுகளின் தகவல் மையம், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான காந்தி கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் நன்னெறி சார்ந்த எண்ணங்களை

திருப்பூர்:சர்வதேச அளவிலான அமைப்புகள் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீராம்சந்த்ரா மிஷன், இந்தியா - பூடான் ஐக்கிய நாடுகளின் தகவல் மையம், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான காந்தி கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் நன்னெறி சார்ந்த எண்ணங்களை வளர்க்கும் வகையிலும் இளம் வயதிலேயே ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டி நடத்தப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. சர்வதேச அளவில் நடத்தப்படுவதால், ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற ஆறு மொழிகள் மற்றும் இந்தியாவின் ஒன்பது மொழிகளில் இதில் பங்கேற்கலாம்.ஒவ்வொரு மொழிப்பிரிவிலும் பரிசளிக்கப்படும். முதல் பரிசாக 30 ஆயிரம், இரண்டாம் பரிசு 22,500 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு மொழிப்பிரிவிலும், சிறந்த 10 கட்டுரைகளுக்கு தகுதி சான்றிதழ், அனைவருக்கும் பங்கேற்பு சான்று வழங்கப்படும்.வரும் 30ம் தேதிக்குள், 'கருணை - நமக்காக, மற்றவர்களுக்காக, சுற்று சூழலுக்காக' என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு hfn.link/essayevent என்ற இணைய தளத்திலும், essayevent@heartfulness.org என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஹார்ட்புல்னெஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X