தென்மாவட்ட போலீசாருக்கு 3 வேளை உணவும் உவ்வே: நெல்லை பாதுகாப்பு பணியில் தினமும் தவிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்ட போலீசாருக்கு 3 வேளை உணவும் 'உவ்வே': நெல்லை பாதுகாப்பு பணியில் தினமும் தவிப்பு

Added : அக் 13, 2021
Share
மதுரை:நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தென்மாவட்ட போலீசாருக்கு தினமும் 3 வேளை வழங்கும் உணவு சரியில்லை என புகார் எழுந்துள்ளது.இம்மாவட்டத்தில் பழிக்குப்பழியாக அடுத்தடுத்து தொடர் கொலைகள் நடந்தன. சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்ப, தென்மண்டல ஐ.ஜி., அன்பு தலைமையில் 8 எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை

மதுரை:நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தென்மாவட்ட போலீசாருக்கு தினமும் 3 வேளை வழங்கும் உணவு சரியில்லை என புகார் எழுந்துள்ளது.

இம்மாவட்டத்தில் பழிக்குப்பழியாக அடுத்தடுத்து தொடர் கொலைகள் நடந்தன. சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்ப, தென்மண்டல ஐ.ஜி., அன்பு தலைமையில் 8 எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட போலீசார் 2100 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சார்பில் தினமும் 3 வேளை உணவாக சாதம், இட்லி வழங்கப்படுகிறது. சில நாட்களாக அந்த உணவு சரியில்லாததால் குப்பையில் வீசிவிட்டு, போலீசார் சொந்த செலவில் உணவு வாங்கி சாப்பிடுவதாக தகவல் வெளியானது.

நெல்லை எஸ்.பி., மணிவண்ணன் கூறியதாவது: சமையல்காரர்கள் மூலம் சமைத்து உணவு கொடுத்து வருகிறோம். இதுவரை புகார் வரவில்லை. போலீசாரின் உணவுப்படியில் கூட நாங்கள் கை வைக்காமல், எங்கள் சொந்த செலவில் சமைத்து தந்து கொண்டிருக்கிறோம். விசிட் செய்யும்போது நானே அந்த உணவை கேட்டு சாப்பிட்டு வருகிறேன். பல வாரங்களாக வெளியூரில் குடும்பத்தை பிரிந்து பணியாற்றும் போலீசாரில் சிலர் விரக்தியில் இதுபோன்று தவறான செய்திகளை பரப்பி இருக்கலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X