தமிழ்நாடு

'ஜீரோ வேஸ்ட்' இயக்கம் துவங்கியது குப்பை இல்லா திருப்பூர்! 2 ஆண்டில் சாத்தியமாக்க கமிஷனர் உறுதி

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:குப்பைகளற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக, 'ஜீரோ வேஸ்ட் திருப்பூர்' இயக்கம் திருப்பூரில் துவங்கியது.திருப்பூர் மாநராட்சியிலுள்ள, 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ, 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவு சேகரமாகிறது. பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.குப்பை கழிவுகள் சேருவதை தவிர்த்தல்,
'ஜீரோ வேஸ்ட்'  இயக்கம்  துவங்கியது குப்பை இல்லா திருப்பூர்! 2 ஆண்டில் சாத்தியமாக்க கமிஷனர் உறுதி

திருப்பூர்:குப்பைகளற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக, 'ஜீரோ வேஸ்ட் திருப்பூர்' இயக்கம் திருப்பூரில் துவங்கியது.திருப்பூர் மாநராட்சியிலுள்ள, 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ, 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவு சேகரமாகிறது. பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.குப்பை கழிவுகள் சேருவதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைள் மூலம் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதில், ஒரு நடவடிக்கையாக தன்னார்வ அமைப்புகள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் மாற்று வழி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், 'உதான்' தன்னார்வ அமைப்பு மூலம் மாநகராட்சி முதல் மண்டலம், காந்தி நகரில் 200 வீடுகள் இணைக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை பணி நேற்று துவங்கியது.
இதனை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம், குப்பை சேகரிப்பு கூடை ஆகியவற்றை வழங்கினார். 'ஜீரோ வேஸ்ட் திருப்பூர்' என்ற இலக்கின் முதல் முயற்சியாக மாநகராட்சியுடன், 'கார்பன் டைனமிக்ஸ்', மாதன் அறக்கட்டளை ஆகியன இணைந்து, 'அடாப்ட் யுவர் நெய்பர்ஹூட்' என்ற இயக்கம் துவங்கியது. இதன் மூலம் தியாகி பழனிசாமி நகர், 10 மற்றும் 11 வார்டுகளில் உள்ள 200 வீடுகள் இதில் இணைந்துள்ளன.குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல், சேகரமான குப்பை 100 சதவீதம் மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இத்திட்டம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறியதாவது:இந்த முதல் கட்ட முயற்சியை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி, முதல் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளும் நான்கு மாதங்களில் குப்பை இல்லாத பகுதியாக மாற்றப்படும். அடுத்த இரண்டாண்டுக்குள் மாநகராட்சி பகுதி முழுவதும் இது முழுமையாக பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கையால், மாநகராட்சி 100 சதவீதம் குப்பையில்லாத பகுதியாக மாறும். இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், வர்த்தக நிறுவனத்தினரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.முதல் கட்ட முயற்சியை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி, முதல் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளும் நான்கு மாதங்களில் குப்பை இல்லாத பகுதியாக மாற்றப்படும். அடுத்த இரண்டாண்டுக்குள் மாநகராட்சி பகுதி முழுவதும் இது முழுமையாக பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202105:46:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 100% வேஸ்ட் முயற்சி. பான்பராக் பானிபூரி கூட்டத்தை வெச்சிக்கிட்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X